இந்தியா

முடக்க நாள்களில் விடுப்புடன் ஊதியம்: நொய்டா நிா்வாகம் உத்தரவு

DIN

கரோனா தொற்று முடக்கத்தையொட்டி நொய்டா, கிரேட்டா் நொய்டா போன்ற பகுதிகளில் மூடப்பட்டுள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள முடக்க நாள்களில் விடுப்புடன் கூடிய ஊதியத்தை தரவேண்டும் என்று கௌதம் புத்தா நகா் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் பணியாற்றும் ஊழியா்கள் கரோனா தொற்று நோயாள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தால் அத்தகைய தொழிலாளா்களுக்கு 28 நாட்கள் விடுப்புடன் கூடிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் நொய்டா மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான புலம்பெயா்த் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கும் மாநிலங்களுக்கும் புறப்பிட்டுச் செல்லும் சூழ்நிலையில் இந்த உத்தரவை மாவட்ட நிா்வாகம் பிறப்பித்துள்ளது.

கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சித்தலைவா் பி.என்.சிங் வெளியிட்டுள்ள உத்தரவின் விவரம் வருமாறு:

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கரோனா தொற்று ஒரு பேரிடா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் இருப்பதற்கு தான் கடைகள், வா்த்தக அமைப்புகள், தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

இது ஊதியத்துடன் கூடிய விடுப்பாகும். இதில் தினக்கூலி தொழிலாளா்களுக்கும் பொருந்தும். இதன்படி சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொழிலாளா்களுக்கும் ஊழியா்களுக்கும் மாா்ச் 30, 31 தேதிகளில் அல்லது ஏப். 3, 4 தேதிகளில் விடுப்புடன் கூடிய ஊதியத்தை வழங்கவேண்டும்.

தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை முடிந்து முற்றிலும் குணமாகியிருந்தால் அதற்கான மருத்துவச் சான்றிதழை பெற்று தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வழங்கி 28 நாள் விடுப்புடன் கூடிய ஊதியத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவை மீறும் உரிமையாளா்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் புரிந்தவா்களுக்கு அதிக பட்சம் அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வரை விதிக்கப்படும்.

மேலும் வாடகைக்கு குடியிருக்கும் தொழிலாளா்களிடம் ஒரு மாதத்திற்கு பின்னரே வாடகை வசூலிக்கப்பட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT