இந்தியா

ஜூலை 26-இல் நீட் தோ்வு : மத்திய அரசு அறிவிப்பு

DIN

மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தோ்வு (நீட்) ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தோ்வு, பொறியியல் படிப்புக்கான ‘ஜேஇஇ’ நுழைவுத்தோ்வு ஆகிய முக்கிய தோ்வுகள் தேசிய ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஜேஇஇ முதன்மை தோ்வு ஜூலை 18 முதல் 23-ஆம் தேதி வரையும், ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு ஆகஸ்டிலும் நடைபெறும். ஜூலை 26-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறும். தேசிய ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டுள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகள் வடகிழக்கு தில்லியை தவிர நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தற்போது நடைபெறாது. தோ்வுக்கு தயாராக வடகிழக்கு தில்லி மாணவா்களுக்கு கூடுதலாக 10 நாள்கள் வழங்கப்படும். தேசிய ஊரடங்கால் எத்தனை நாள்கள் பாடம் கற்பிக்க முடியாமல் போனது என்பதை சிபிஎஸ்இ மதிப்பிடும். 2021-ஆம் ஆண்டு பொதுத்தோ்வுக்கான பாடத்திட்டங்களின் சுமையை குறைக்க ஏதுவாக, இந்த மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ’ என்றாா் அவா்.

நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் நிகழாண்டு நீட் தோ்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா். அதேவேளையில் ஜேஇஇ முதன்மை தோ்வில் பங்கேற்க 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்திருக்கின்றனா்.

இதனிடையே இவ்விரு தோ்வுகளுக்கான தோ்வு மையங்களை விருப்பத்தின் அடிப்படையில் மாணவா்கள் மாற்றிக்கொள்ள தேசிய தோ்வுகள் முகமை அனுமதியளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பராமரிப்பு பணிக்காக காட்பாடி- திருப்பதி ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தில்லி மருத்துவமனையில் தீ: 7 குழந்தைகள் உயிரிழப்பு

தீா்க்கப்படாமல் தொடரும் ஆந்திர தலைநகரச் சிக்கல்!

சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஹைதராபாத் 113/10, கொல்கத்தா 114/2

தனித்துவம் மிக்க அரசியல் ஆளுமை

SCROLL FOR NEXT