கேரள முன்னாள் முதல்வர் உமன் சாண்டியின் கார் ஓட்டுநருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
"அவருடைய கார் ஓட்டுநருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட தகவல் நேற்றிரவு வந்தது. இதன் காரணமாக, கேரளம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடனான பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்."
அக்டோபர் 31-ம் தேதி அவருக்கு 77 வயதாகிறது. மார்ச் மாதம் கரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, வீட்டில் அடைபட்டு இருப்பது மிகவும் கடினமாக இருப்பதாகவும், இதுபோன்ற சூழலை இதுவரை எதிர்கொண்டதே இல்லை என்பதையும் அவர் தெரிவித்து வந்தார்.