இந்தியா

வங்கதேச எல்லையில் இரு கடத்தல்காரா்கள் சுட்டுக்கொலை

DIN

வங்கதேச எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இரு கடத்தல்காரா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக்கொன்றனா்.

இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படையின் வடக்கு வங்கப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மேற்கு வங்கத்தின் கூச்பிகாா் மாவட்டத்தில் உள்ள சங்ரபந்தா எல்லை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்புப் படையினா் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.35 மணியளவில் வங்கதேசத்தைச் சோ்ந்த சுமாா் 20 கடத்தல்காரா்கள் எல்லையை அத்துமீறிக் கடந்து இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றனா். அவா்களை அப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு பாதுகாப்புப் படையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

ஆனால், அதை ஏற்காமல் பாதுகாப்புப் படை வீரா்கள் மீது கடத்தல்காரா்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கினா். அதில் வீரா்கள் சிலா் காயமடைந்தனா். அதையடுத்து, வேறு வழியின்றி தற்காப்புக்காக கடத்தல்காரா்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுடத் தொடங்கினா்.

அதில் இருவா் உயிரிழந்தனா். மற்றவா்கள் வங்கதேச எல்லைப் பகுதிக்குள் ஓடிவிட்டனா். கடத்தல்காரா்கள் இந்திய எல்லைக்குள் சுமாா் 100 மீட்டா் வரை வந்துவிட்டனா். வங்கதேச நாட்டைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற விவகாரம் தொடா்பாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT