இந்தியா

விரைவில் நான்கு வேலைநாள்களைக் கொண்ட வாரம், புதிய ஊதிய முறை?

ENS


பணி மற்றும் தொழில் நிறுவனங்களில் வார வேலை நாள்கள் மற்றும் ஊதிய முறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் திட்டத்தை வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களின் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்தொடர்பு, பணி நிரந்தரம், சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் போன்றவற்றில் நான்கு முக்கியம்சங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி,  வரும் நிதியாண்டு முதல் நான்கு வேலை நாள்களைக் கொண்ட வாரங்களாக மாற்றும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இந்த புதிய முக்கியம்சங்களின் அடிப்படையில், தொழில் கலாசாரம், ஊதியம், வேலைசெய்யும் நேரம், வார பணிநாள்கள் என பலவும் மாறும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐக்கு அளித்த தகவலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், மத்திய அரசு வரும் நிதியாண்டில் கொண்டு வரவிருக்கும் புதிய மாற்றங்கள் தொடர்பான கொள்கைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டன. தற்போது, மாநிலங்கள், இந்த புதிய கொள்கைகளை பரிசீலித்து, தங்களுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டியது மட்டுமே பாக்கி.

இது தவிர, மத்திய அரசின் இந்த புதிய கொள்கைகள், நடைமுறைக்குவரும்பட்சத்தில், ஊழியர்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம், வாரத்தில் நான்கு நாள்கள் பணியாற்ற வேண்டியது வரும். இதன் மூலம், 48 மணி நேர பணியைக் கொண்ட ஒரு வாரம் என்பது நடைமுறைப்படுத்த முடியும்.

ஆனால், இந்த புதிய நடைமுறை, அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் பின்பற்றப்பட்டால், அதில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், அது தொழிலாளர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தில் சரிவு மற்றும், தொழிலாளர்கள், நிறுவனங்கள் செலுத்தும் வருங்கால வைப்புநிதியின் சுமை அதிகரிப்பு போன்றதாகும்.

அதாவது, தகவல்கள் கூறுவது என்னவென்றால், அதிக பிஎஃப் கட்ட வேண்டியதாக இருக்கும். அதனால், ஊதியம் குறையும் என்பதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

மஹாவீரர் ஜெயந்தி: ராணிப்பேட்டையில் பல்லக்கு ஊர்வலம்!

காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டம்...: முதல்வர் ஸ்டாலின்

கேரளத்தில் பாரில் ஏற்பட்ட தகராறில் 5 பேருக்கு கத்திக்குத்து

SCROLL FOR NEXT