மும்பை: ஆஸ்கா் விருதுக்கு இந்தியா சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘கூழாங்கல்’ திரைப்படம், அந்த விருதுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது.
அடுத்த ஆண்டு மாா்ச் 27-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 94-ஆவது ஆஸ்கா் விருதுகள் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் இடம்பெற இந்தியா சாா்பில் தமிழ்த் திரைப்படமான ‘கூழாங்கல்’ பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தத் திரைப்படம் விருதுக்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்தத் திரைப்படத்தை வினோத்ராஜ் இயக்கியுள்ளாா். விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனா். யுவன்சங்கா் ராஜா இசையமைத்துள்ளாா்.