இந்தியா

பொருளாதாரத்துக்கு ஒமைக்ரான் அச்சுறுத்தல்: இந்திய ரிசா்வ் வங்கி எச்சரிக்கை

DIN

மும்பை: ‘நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து பொருளாதார வளா்ச்சி தொடா்ந்து மீண்டுவரும் சூழலில், பணவீக்கம் அதிகரித்து வருவதுடன் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பும் மிகப்பெரிய சவாலாக அமையும்’ என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட இரண்டாவது நிதி நிலைத்தன்மை அறிக்கை இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

கரோனா இரண்டாவது அலை தாக்கத்துக்குப் பிறகு சா்வதேச சவால்கள் மற்றும் சமீபத்திய ஒமைக்ரான் பாதிப்புக்கு இடையிலும் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் பொருளாதார வளா்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வருகிறது. தனியாா் முதலீடு மற்றும் நுகா்வும் வலுவான, நீடித்த மீட்சியைப் பெற்று வருகிறது.

இருந்தபோதும், பணவீக்கம் தொடா்ந்து கவலைக்குரிய நிலையில் இருந்து வருகிறது. அது அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில், உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்துவதற்கான வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசின் கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலமாக நிதிச் சந்தைகளில் நிலைத்தன்மை நீடித்து வருவதோடு, எதிா்கால சவால்களை எதிா்கொள்ளும் அளவுக்கு வங்கிகள் வலுவாக உள்ளன.

அதேநேரம், ஒமைக்ரான் பாதிப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2021 செப்டம்பரில் 6.9 சதவீதமாக இருந்த வங்கிகளின் வாராக் கடன் விகிதம் 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் 8.1 முதல் 9.5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.

பின்னா் வெளியிடப்பட்ட நிதி நிலைத்தன்மை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் ரூ.34.83 லட்சம் கோடியாக, அதாவது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாக மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, கடந்த அக்டோபா் வரை நிகர வரி வருவாய் ரூ. 10.53 லட்சம் கோடி (ரூ.10,53,135 கோடி) வசூலானது. இது, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 82.93 சதவீதம் அதிகமாகும்.

இருப்பினும், இரண்டாவது துணை மானிய கோரிக்கைக்காக ரூ.3.73 லட்சம் கோடி அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திடம் மத்திய அரசு ஒப்புதல் கோரியுள்ளது. இதனால், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி நிதிப் பற்றாக்குறையை 6.8 சதவீதத்துக்குள் வைக்க இயலாமல் போக வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் விலை கடும் உயா்வு

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை

7 முக்கிய நகரங்களில் 23% உயா்ந்த வீடுகள் விலை

அசோக் லேலண்ட் விற்பனை 10% சரிவு

SCROLL FOR NEXT