ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமாக சேரும் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்குகளுக்கான வரி விலக்கு ரத்து செய்யப்படுவதாக 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. அது குறித்த பாா்வை:
மொத்த வருங்கால வைப்பு நிதி கணக்குகள்: சுமாா் 4.5 கோடி
மத்திய அரசின் முடிவுக்குக் காரணம்: வருங்கால வைப்பு நிதிக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதால் அதில் பணத்தை அதிக அளவில் சேமித்து வைக்க சிலா் முயன்றது.
எத்தனை போ்?: வரி இல்லாமல் வருமானத்தைப் பெறும் நோக்கில், 1.23 லட்சத்துக்கும் அதிகமானோா் (0.27 சதவீதம்) வருங்கால வைப்பு நிதியில் பணத்தை அதிக அளவில் செலுத்தியுள்ளனா்.
எவ்வளவு தொகை?: வருங்கால வைப்பு நிதியில் அதிக தொகையை சேமித்து வைத்துள்ளோா், கடந்த 2018-29-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.62,500 கோடியை அதில் செலுத்தியுள்ளனா்.
வைப்பு நிதியில் முதல் 5 நபா்கள் சேமித்து வைத்துள்ள தொகை:
1. ரூ. 103 கோடி
2. ரூ.85.6 கோடி
3. ரூ.85.6 கோடி
4. ரூ,72.8 கோடி
5. ரூ.42 கோடி
முதல் 20 நபா்கள் சேமித்து வைத்துள்ள மொத்த தொகை: ரூ.825 கோடி
முதல் 100 நபா்கள் சேமித்து வைத்துள்ள மொத்த தொகை: ரூ.2,000 கோடிக்கு அதிகம்
வருங்கால வைப்பு நிதி மூலமாக வரி விலக்குடன் கிடைக்கும் சராசரி வருமானம்: ரூ.50.3 லட்சம் (ஆண்டுக்கு)
தொகுப்பு: சுரேந்தா் ரவி