இந்தியா

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு: சீறிப்பாயும் காளைகள்

DIN

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம்  தம்மம்பட்டியில் ஆண்டுதோறும், பல மாவட்டங்களின் காளைகள்  பங்கேற்று சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு சனிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சி.அ.இராமன் தலைமை வகித்தார்.

ஆத்தூர் கோட்டாட்சியர் துரை, கெங்கவல்லி வட்டாட்சியர் மு.வரதராஜன், தம்மம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஸ்ரீகுமரன், ஆத்தூர் ஏசி எம் எஸ் கூட்டுறவு வங்கித் துணைத் தலைவர் துரை.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாடுபிடி வீரர்களின் உறுதி மொழி ஏற்புக்கு பின்னர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர். இளங்கோவன்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முதலில் சாமி காளை விடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக, வாடி வாசலிலிருந்து அறுத்து விடப்பட்டன.

மாடுபிடி வீரர்கள் நூறு பேர் வீதம் குறிப்பிட்ட கால இடைவேளையில் களத்தினுள் அனுப்பப்பட்டனர். காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் விழாக்குழு  கேலரியிலும், லாரி, வேன், டெம்போக்களிலும் அமர்ந்து ரசித்தனர். வட்டார தலைமை மருத்துவர் வேலுமணி தலைமையில்  மருத்துவர்கள், செவிலியர், சுகாதாத பணியாளர்கள் என 80 பேர் அடங்கிய குழுவினர், மாடு முட்டி காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

சேலம் எஸ்.பி. தீபாகனிகர்  தலைமையில் கூடுதல் எஸ்.பி, ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட டி.எஸ்.பிக்கள், 16  இன்ஸ்பெக்டர்கள், 30 எஸ்.ஐ க்கள், விரைவுப் படை ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர் என  மொத்தம் 290 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழாவில் காளைகளை விடப்படுவதற்கு முன், காளைகளை பரிசோதித்து உள்ளே அனுப்பும் பணியில் 100க்கும் மேற்பட்ட  கால்நடை பராமரிப்பு த் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT