இந்தியா

கேரளத்தில் 10 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

DIN

கேரளத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 61,843 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
இவற்றில் புதிதாக 4,612 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,04,135ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும 15 பேர் பலியானார்கள். 
இதையடுத்து மொத்த பலி எண்ணிக் 3985ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 4692 பேர் குணமடைந்தனர். இதுவரை 9,36,398 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 63,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை..!

எலான் மஸ்க்கிடம் வேண்டுகோள் விடுத்த கல்கி இயக்குநர்!

பொதுக்கூட்டத்தில் மயக்கமுற்ற இளைஞர்: பேச்சை நிறுத்திய மோடி!

பிரதமர் மோடி குமரிக்கு வருகை: தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது -காங்.

பிரதமர் மோடி கடவுளின் அவதாரமா? -ஆர்.எஸ்.எஸ்.க்கு கேஜரிவால் கேள்வி

SCROLL FOR NEXT