நாட்டில் இதுவரை 35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,70,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 35,00,027 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 4,63,793 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், அதற்கடுத்த இடத்தில் ராஜஸ்தான் 3,24,973 பேருடனும், கர்நாடகம் 3,07,891 பேருடனும் மகாராஷ்டிரம் 2,61,320 பேருடனும் தடுப்பூசி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 1.7 லட்சமாகக் குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.6 சதவீதமாகும்.