கரோனா புதிய தடுப்பூசி திட்டத்தின் 4-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணி வரை 58 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம், நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மொத்த எண்ணிக்கை 30.72 கோடியைத் தாண்டியுள்ளது.
இதுதவிர 18-44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டதன் தரவுகளும் வெளியாகியுள்ளன. 18-44 வயதினரில் 7,43,45,835 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 15,70,839 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் 42,75,722 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 37,476 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.