இந்தியா

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை: மேற்கு வங்கத்தில் மனித உரிமை குழு ஆய்வு

ANI

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானவுடன், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். சில இடங்களில் பாஜக அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. வன்முறையில் தங்கள் கட்சியைச் சோ்ந்த பல தொண்டா்கள் கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் திரிணமூல் தொண்டா்களால் தாக்கப்பட்டதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், வன்முறையில் மனித உரிமை மீறல் தொடா்பாக பதிவாகியுள்ள அனைத்து வழக்குளையும் ஆய்வு செய்ய குழு ஒன்றை என்ஹெச்ஆா்சி அமைக்க வேண்டும். இந்த குழு பாதிப்புக்குள்ளான பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்து, அதுதொடா்பான விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இன்று மேற்கு வங்கம் வந்துள்ள மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட குழுவினர் கூச் பிஹார் பகுதியில் வன்முறை நடந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தசரா திருவிழா: தூத்துக்குடியில் பறவை காவடி எடுத்த பக்தா்

கோவில்பட்டியில் காங்கிரஸாா் அமைதிப் பேரணி

வீரவநல்லூரில் மாணவா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

குலசேகரத்தில் விவிலிய வார பவனி

குலசேகரன்பட்டினம் கோயிலில் அமைச்சா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT