இந்தியா

புதுச்சேரி கல்லூரிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்பு தொடக்கம்

ANI

புதுச்சேரியில் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றது.

கரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், புதுவையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும், முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. 

புதுச்சேரியில் மார்ச் 26 முதல் ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளது. 

அதேசமயம், கல்லூரியில் படிக்கும் இறுதி பருவ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மட்டும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நேரடி வகுப்பு மூலமே நடத்தப்பட உள்ளது. 

கரோனா பாதிப்பு தொடர்ந்து புதுச்சேரியில் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா், சிவகாசி, சாத்தூரில் இறுதிக்கட்ட பிரசாரம்

கிணற்றில் மூழ்கி மாணவா் பலி

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி இறுதிக்கட்ட பிரசாரம்

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT