கரோனாவுக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ் சிகிச்சை பலனின்றி காலமானார்.
மகாராஷ்ரம் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களை உறுப்பினர் ராஜீவ் சதவ்(46) ஏப்ரல் 22 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புனேயில் உள்ள ஜகாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரோனாவில் இருந்து மீண்டு வந்த ராஜீவ் சாதவ் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. உடல்நிலை மோசந்தமடைந்த நிலையில் உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதை அடுத்து வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு ராகுல் காந்தி, ப.சிதம்பரம், ரன்தீப் சுர்ஜேவாலா, வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.