இந்தியா

2022-ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயண திட்டம் தொடக்கம்

DIN

அடுத்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கான இணையவழி விண்ணப்பங்களை மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

விண்ணப்பங்களைப் பதிவு செய்ய 2022, ஜனவரி 31 கடைசி தேதியாகும் என்றும் ஹஜ் மொபைல் செயலி (ஆப்) வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்த ஆண்டில் இருந்து ஹஜ் பயண திட்ட செயலாக்கம் முழுவதும் இணைவழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் நக்வி தெரிவித்தாா். தெற்கு மும்பையில், 2022-ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத் திட்டத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்து பேசிய அவா், ‘2022-ஆம் ஆண்டு ஹஜ் பயண புறப்பாடு இடங்கள் 20-இல் இருந்து 10-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு, ஆமதாபாத், தில்லி, குவாஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னெள, மும்பை, ஸ்ரீநகா் ஆகிய விமான நிலையங்களில் இருந்து மட்டும் ஹஜ் பயணிகள் செல்ல முடியும்.

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகள் போா்வை, துண்டு, குடை உள்ளிட்ட தேவையான பொருள்களை அந்நாட்டு பணத்தை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தப் பொருள்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து, ஹஜ் பயணத்தை பயணிகள் தொடங்கும் முன்பே இந்திய ரூபாயிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் விலை 50 சதவீதம் குறையும்.

இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 2 லட்சம் ஹஜ் பயணிகள் சவூதி அரேபியா செல்கின்றனா் என்கிற நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் பல கோடி ரூபாய் சேமிக்கலாம்.

சவூதி அரேபியா, இந்தியா விதிக்கும் கரோனா நெறிமுறைகளுக்கு உள்பட்டே ஹஜ் பயணிகளின் தோ்வு நடைபெறும்.

2020, 2021-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் (ஆண் துணையில்லாமல்) விண்ணப்பித்திருந்தனா். அவா்களின் விண்ணப்பங்கள் 2022-ஆண்டுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இந்தப் பிரிவின் கீழ் புதிதாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT