கேரளத்தில் புதிதாக 8,733 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை 11 ஆயிரத்துக்கும் மேல் கரோனா பாதிப்புகள் பதிவான நிலையில், தினசரி பாதிப்பு மீண்டும் 10 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,855 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 118 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | தில்லியில் புதிதாக 22 பேருக்கு கரோனா
இதுவரை மொத்தம் 47,79,228 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 27,202 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 81,496 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 86,303 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.