ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியானார்கள்.
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நிலச்சரிவைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வசித்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.