107வது நாள் ஒற்றுமைப் பயணம்! ஹரியாணாவில் 2வது நாள்!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமைப் பயணம் ஹரியாணாவில் 107வது நாளை எட்டியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமைப் பயணம் ஹரியாணாவில் 107வது நாளை எட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் 2வது நாளாக நடைப்பயணம் தொடங்கியுள்ளது.
இந்த நடைப்பயணமானது மொத்தம் 3,570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைகிறது.
ஒற்றுமைக்கான நடைப்பயணம் முடிவடைய இன்னும் 44 நாள்களே உள்ள நிலையில், நடைப்பயணத்தில் பங்கேற்போர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற கரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஒற்றுமைப் பயணம் முழுமையாக நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி ஹரியாணா மாநிலம் கெர்லி லாலா பகுதியிலிருந்து ராகுல் தலைமையில் 107வது நாள் பயனம் தொடங்கியது. கடும் பனிக்கு மத்தியில் தொடங்கிய காங்கிரஸ் பயணத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர்.