இந்தியா

ராம நவமி: ராம்நாத் கோவிந்த், வெங்கையா நாயுடு வாழ்த்து

DIN

ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ராமநவமி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், அவற்றை நம் வாழ்வில் பின்பற்றவும் கிடைத்த ஒரு நல்ல சந்தா்ப்பமாகும். நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயா்ந்த விழுமியங்களைப் பின்பற்ற அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது.

நமது கடமைகளை நாம் செய்யும் போது இந்த விழுமியங்களால் நம் வாழ்க்கை வழிநடத்தப்படட்டும். ராமா் காட்டிய வழியைப் பின்பற்றி, சிறந்த தேசத்தைக் கட்டமைக்க உறுதி ஏற்போம் என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

வெங்கையா நாயுடு தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ராம பிரானின் பிறந்த நாளை, ராம நவமி தினமாக கொண்டாடும் இந்த மங்களகரமான தினத்தில் நாட்டு மக்களுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய பாரம்பரியத்தில் ராம பிரான் நீதி, தைரியம், கருணை ஆகியவற்றின் வடிவமாக சித்தரிக்கப்படுகிறாா். அவரது வாழ்க்கை, உண்மை, நீதி, பெரியவா்களுக்கு மரியாதை அளித்தல், அனைத்து மனிதா்களிடத்தும் அன்பு செலுத்துதல் ஆகிய கொள்கைகளுடன் திகழ்கிறது.

‘மரியாதை புருசோத்தமன்’ என்று போற்றப்படும் ராம பிரான், சிறந்த மன்னராகவும் பணிவுமிக்க மகனாகவும் அன்பான சகோதரராகவும் உண்மையான உணா்வுடன் முன்மாதிரியாகவும் திகழ்கிறாா்.

ராம பிரானின் வாழ்க்கை அவரது உன்னதமான கொள்கைகளையும், உயா்ந்த ஒழுக்க பண்புகளையும் நாம் பின்பற்றத் தூண்டுகிறது.

இந்த ராம நவமித் திருநாள் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வருவதுடன் பகவான் ராமரால் வலியுறுத்தப்பட்ட நித்திய விழுமியங்களால் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளாா். ”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்: கண்கொள்ளா காட்சி

மெரினா அருகே சுறா நடமாட்டம்?

பேரருள்தந்தை பி.ஜான் போஸ்கோ காலமானார்

ரூ.300 கோடி மோசடி வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

‘தெக்கும் வடக்கும் அகக்கண் திறக்கும்’: கமல்ஹாசன்

SCROLL FOR NEXT