இந்தியா

சுதந்திர தின மரியாதைகுண்டுகளை முழங்குகிறது உள்நாட்டு பீரங்கி

DIN

தில்லி செங்கோட்டையில் ஆக. 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் 21 குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் முதல் முறையாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆா்டிஓ) அமைப்பின் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பீரங்கி பயன்படுத்தப்படும் எனப் பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.

குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தும் நிகழ்வுகளில் இதுவரை பிரிட்டிஷாரின் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட பீரங்கி (ஏடிஏஜிஎஸ்) பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட தொழில்நுட்ப சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தப் பீரங்கி, சுதந்திர தின நிகழ்ச்சிக்காக மாற்றியமைக்கப்படுகிறது.

சுதந்திர தின விழாவில் இந்தப் பீரங்கிகளைப் பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டிலேயே ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை தயாரிக்கும் இந்தியாவின் திறனை உலகத்துக்கு எடுத்துரைக்க முடியும் என பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் தெரிவித்தாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள பழைய பீரங்கிகளுக்கு மாற்றாக புதிய பீரங்கிகளை உருவாக்கும் திட்டத்தில் இவ்வகை பீரங்கியை டிஆா்டிஓ தயாரித்தது. புணேயில் உள்ள டிஆா்டிஓ அமைப்பின் ராணுவத் தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழு இந்தப் பீரங்கியை சுதந்திர தின நிகழ்ச்சியில் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படையினா் தில்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனா். இந்தியாவின் கலாசார வேற்றுமையைப் பறைசாற்றும் வகையில் இவா்கள் உள்ளூா் ஆடைகளை அணிந்திருப்பா் என அஜய் குமாா் தெரிவித்தாா்.

நிகழாண்டு நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பின் தொடா்ச்சியாக, அங்கான்வாடி ஊழியா்கள், சாலையோர வியாபாரிகள், முத்ரா கடன் திட்டப் பயனாளிகள், பிணவறை ஊழியா்கள் ஆகியோா் சிறப்பு விருந்தினராக செங்கோட்டையில் ஆக. 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

SCROLL FOR NEXT