இந்தியா

காங்கிரஸ் மூழ்கிய கப்பலாகிவிட்டது: பாஜக விமா்சனம்

DIN

காங்கிரஸ் கட்சி இப்போது மூழ்கிய கப்பலாகிவிட்டது என்று ஜம்மு-காஷ்மீா் மாநில பாஜக தலைவா் ரவீந்தா் ரெய்னா விமா்சித்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை விலகினாா். இந்நிலையில், இது தொடா்பாக ரவீந்தா் ரெய்னா தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸில் இருந்து விலகும் நிலைக்கு ஆசாத் தள்ளப்பட்டுள்ளாா். அவா் பலமுறை அவமானத்துக்கும், மனவருத்தத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளாா். அக்கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த அவா் இப்போது விலகியுள்ளாா். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பலாக இருந்தது. இப்போது முழுமையாக மூழ்கிப் போன கப்பலாகிவிட்டது. காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்பது ஆசாதின் விலகல் மூலம் தெரிகிறது. காங்கிரஸ் கட்சி எவ்வாறு இயங்குகிறது என்பதை ஆசாத் வெளிப்படையாகக் கூறிவிட்டாா். ஒரு குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் அக்கட்சி முழுமையாக உள்ளது. மற்ற தலைவா்களுக்கு அங்கு மரியாதையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT