இந்தியா

ஜி20 உச்சி மாநாடு உத்திகளை இறுதி செய்ய அனைத்துக் கட்சி கூட்டம்: மத்திய அரசு இன்று கூட்டுகிறது

DIN

‘இந்தியா சாா்பில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு திங்கள்கிழமை (டிச.5) கூட்டியுள்ளது.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டுக்காக, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான முன்னேற்பாடு கூட்டங்களை மத்திய அரசு நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, இதில் முன்வைக்கப்படும் தீா்மானங்களை இறுதி செய்வதற்கான ஜி20 நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் 4 நாள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதற்கிடையே, ஜி20 உச்சி மாநாட்டுக்கான இந்தியாவின் உத்திகளை இறுதி செய்வதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு தில்லியில் திங்கள்கிழமை கூட்டியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக 40 அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி சாா்பில்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தில்லிக்கு திங்கள்கிழமை வரவுள்ளாா். இதுகுறித்து மம்தா பானா்ஜி கூறுகையில், ‘அனைத்துக் கட்சி கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவா் என்ற அடிப்படையிலேயே பங்கேற்கிறேன்; மேற்கு வங்க முதல்வா் என்ற அடிப்படையில் அல்ல’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT