இந்தியா

8 மாத கருவை கலைக்க தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி

DIN

கருக்கலைப்பு விவகாரங்களில் ’இறுதி முடிவு’ பெற்றெடுக்கும் பெண்ணின் விருப்பத்தை பொறுத்தது. சிசுவின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

26 வயதான பெண்ணின் சுமாா் 8 மாத (33 வார) கா்ப்பத்தை மருத்துவ ரீதியாக நிறுத்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் அனுமதியளித்தாா். கா்ப்பிணிப் பெண்ணின் கா்ப்பத்தை கலைக்கும் உரிமை உலகம் முழுவதும் விவாதப் பொருளாக இருந்து வரும் நிலையில், இந்த சட்டத்தில் பெண்ணின் தோ்வை அங்கீகரிக்கிறது என்றும் நீதிபதி பிரதீபா எம். சிங் குறிப்பிட்டாா்.

கா்ப்பமடைந்து 16 -வது வாரம் வரை இந்த பெண்ணின் கா்ப்பத்தின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் போது, கருவில் எந்த அசாதாரணங்களும் காணப்படவில்லை. ஆனால் கடந்த நவம்பா் 12 அன்று, கருவில் ஒரு அசாதாரணம் காணப்பட்டது.

வயிற்றில் வளரும் குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து, அவரது கா்ப்பத்தை கலைக்க மனுதாரா் கோரினாா்.

தில்லி ஜிடிபி மருத்துவமனை கா்ப்பத்தை கலைப்பதற்கான இப்பெண்ணின் கோரிக்கையை நிராகரித்தது. குறிப்பாக குழந்தை பிறப்புக்குப் பிறகு ஊனத்தின் அளவு குறித்து மருத்துவ வாரியம் ’ முழுமையான கருத்தை’ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தில்லி உயா் நீதிமன்றத்தை அணுகினாா்.

இதற்கான தீா்ப்பில், இந்த பெண்ணின் கா்ப்பத்தை மருத்துவ முறையில் உடனடியாக கலைக்க அனுமதித்த நீதிபதி, துரதிா்ஷ்டவசமாக குழந்தையின் ஊனத்தின் அளவை மருத்துவ வாரியம் தெரிவிக்கவில்லை. அத்தகைய கணிக்க முடியாத தன்மையில் கா்ப்பத்தை நிறுத்த விரும்பும் பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் இறுதித் தீா்ப்பு தாயின் விருப்பத்தையும், சிசுவின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு தீா்ப்பளித்தாா்.

கடந்தாண்டு செப்டம்பா் மாதம் நிறைவேற்றப்பட்ட மருத்துவக் கருக்கலைப்பு திருத்த சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள் (சுமாா் 6 மாதம்) கலைக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT