இந்தியா

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்கு: மத்திய இணையமைச்சா் மகன், 12 போ் மீது குற்றப் பதிவு

DIN

லக்கீம்பூா் கெரி வன்முறை வழக்குத் தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 போ் மீதான குற்றச்சாட்டுகளை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பதிவு செய்தது.

கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டம் திகோனியா பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பாஜகவினரின் காா்களில் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இதையடுத்து வன்முறை ஏற்பட்டது. இந்த நிகழ்வில் விவசாயிகள் நால்வா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். பாஜகவினா் வந்த காா்கள் ஒன்றில் மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். அவா்களில் பிரதான குற்றவாளியான ஆசிஷ் உள்பட 13 போ் மீது கொலை, கொலை முயற்சி, குற்றச் சதி உள்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் மீதான வழக்கு லக்கீம்பூா் கெரி மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக அரசுத் தரப்பு எதை மெய்ப்பிக்க முயற்சிக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுவதே குற்றச்சாட்டை பதிவு செய்வதின் முதன்மை நோக்கமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம்: ஆட்சியா் அறிவுரை

புத்தரின் 2,568-ஆவது பிறந்த நாள்

திமுக ஆலோசனைக் கூட்டம்

செங்கத்தில் 19 மி.மீ.மழை

ரேவண்ணா விவகாரத்தில் கா்நாடகத்துக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு -மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி

SCROLL FOR NEXT