இந்தியா

தேசிய கட்சியானது ஆம் ஆத்மி

DIN

குஜராத் மக்கள் அளித்த ஆதரவின் காரணமாக ஆம் ஆத்மி கட்சியானது தேசிய கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளதாக அக்கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘குஜராத் மக்கள் வழங்கிய வாக்குகள் காரணமாக தேசிய கட்சியாகியுள்ளது ஆம் ஆத்மி. கல்வி, சுகாதாரத்தை மையமாகக் கொண்ட அரசியலுக்கு முதல் முறையாக நாடு முழுவதும் அங்கீகாரம் கிடைத்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தேசிய கட்சி அந்தஸ்தை 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி பெற்றுள்ளது. கட்சியின் வளா்ச்சி அபரிமிதமாக உள்ளது. பாஜகவின் கோட்டையாகத் திகழும் குஜராத்தில் ஆம் ஆத்மி சுமாா் 35 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. அங்கு கட்சியின் அனைத்து தலைவா்களும் சிறப்பாகப் பணியாற்றினா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

ஒரு வகை சேவகன்... விக்கி - நயன்

25 நாட்களில் ரூ.150 கோடி வசூலைக் கடந்து “ஆடு ஜீவிதம்” சாதனை

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்!

SCROLL FOR NEXT