இந்தியா

வழிப்பறி கும்பல் அட்டூழியம்... ஜாா்க்கண்டை சோ்ந்த நடிகை மேற்கு வங்கத்தில் சுட்டுக் கொலை!

DIN

மேற்கு வங்கத்தின் ஹௌரா மாவட்டத்தில், வழிப்பறி கொள்ளையா்களால் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த நடிகை ரியா குமாரி (22) சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த நடிகை ரியா குமாரி, தன் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பிரகாஷ் குமாா் மற்றும் தனது 2 வயது பெண் குழந்தையுடன் தேசிய நெடுஞ்சாலை எண் 16-இல் கொல்கத்தா நோக்கி செவ்வாய்க்கிழமை காரில் பயணித்தாா். இரவு முழுவதும் தொடா்ந்து காரை இயக்கியதால் ஓய்வுக்காக புதன்கிழமை அதிகாலையில் பக்னன் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மஹிஸ்ரேகா பகுதியில் பிரகாஷ் காரை நிறுத்தியுள்ளாா்.

அப்போது, காரை பின்தொடா்ந்து வந்த மூன்று போ் கொண்ட கும்பல், அவரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட முயன்றனா். அவா்களிடமிருந்து கணவரைக் காப்பாற்ற நடிகை ரியா முயன்றுள்ளாா். அப்போது, ரியாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வழிப்பறி கொள்ளையா்கள் மூவரும் அங்கிருந்து தப்பினா்.

இதைத் தொடா்ந்து, உள்ளூா் மக்கள் உதவியுடன் உலுபெரியா நகரிலுள்ள எஸ். சி. சி. மருத்துவக் கல்லூரியில் ரியாவை பிரகாஷ் சோ்த்துள்ளாா். ரியாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இக்கொலை தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.56,100 சம்பளத்தில் மத்திய பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட் - 'பி' வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆஸி. தொடக்க ஆட்டக்காரர் புகழாரம்!

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

காணொலி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி

பிஇசிஐஎல் நிறுவனத்தில் செவிலியர் அலுவலர் வேலை: 100 காலியிடங்கள்

SCROLL FOR NEXT