லக்னௌ: மதச் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துவந்த நிலையில், தற்போது கிராமப்புற சுற்றுலாவில் கவனம் செலுத்தி வருகிறது முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு.
மாநில அரசின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி,
சுற்றுலாத் துறை வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட குழுவில் ஈடுபட்டு, நகரத்தில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு அருகில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒன்று அல்லது இரண்டு கிராமங்களைக் கண்டறிந்து, கிராமப்புற சுற்றுலாவின் வளத்தை மேம்படுத்த உள்ளது.
கோரக்பூரின் ஔரங்காபாத் கிராமம் டெரகோட்டாவுக்கு புகழ்பெற்றது. லக்னௌவில் உள்ள மலிஹாபாத், டஷேரி மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றவை. இவை உலக சுற்றுலா வரைபடத்தில் இணைக்கப்படலாம்.
மாநிலத்தில் மறைந்திருக்கும் ரத்தினங்களான உள்ளூர் கைவினைப்பொருட்கள், நாட்டுப்புற இசை, உணவு வகைகள், இயற்கை விவசாயம், பண்ணை தங்குமிடங்கள், மூலிகை கிராமங்கள், யோகா மற்றும் தியான மையங்கள் இவற்றை ஆராய்ந்து வெளிகொண்டுவர வேண்டும்.
உலகம் முழுவதிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில் சுற்றுலா உலகளாவிய மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களை இயக்குகிறது. உத்தரப் பிரதேசம், வலுவான கலாசார, மத பாரம்பரியம் மற்றும் பல்வேறு இயற்கை இடங்களைக் கொண்டிருந்தாலும், தற்போது உலக சுற்றுலாத் துறையில் ஒப்பிடுகையில் சிறிய பங்கை வகிக்கிறது. கிராமங்களில் பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகள் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள செழுமையைத் திறம்பட நிலைநிறுத்தப்பட வேண்டும்.
அயோத்தி, மதுரா, குஷிநகர், சித்ரகூட் போன்ற மையங்களின் வளர்ச்சியால் உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறை மிக வேகமாக மாறி வருவதாகவும் அவர் மேற்கொள் காட்டி கூறினார்.
கிராமப்புற சுற்றுலாவுக்கான உந்துதல் கிராமப்புற உட்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும் என்றார் அவர்.