இந்தியா

’நான் மட்டும் மும்பை வருவேன்..’: ஏக்நாத் ஷிண்டே

DIN

ஆதரவு எம்எல்ஏக்கள் இல்லாமல் தான் மட்டும் மும்பை வருவதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வரும் வேளையில் சிவசேனை அதிருப்தித் தலைவர் எக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்எல்ஏக்கள் 52 பேருடன் கோவாவில் உள்ளார் .

இதற்கு முன், நேற்று (புதன்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

இதுகுறித்து அவர் பேசியபோது,

சட்டப்பேரைவயில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை. எனவே, முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதோடு, எனது சட்ட மேலவை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். பதவியை ராஜிநாமா செய்வதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் எந்தவித பிரச்னையுமின்றி மாநிலம் திரும்புவதற்கு சிவசேனை தொண்டா்கள் அனுமதிக்கவேண்டும். அவா்களுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடந்து மகாராஷ்டிரத்தில் புதிய முதல்வர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், சிவசேனை கட்சியின் எம்பியான சஞ்சய் ரௌத் ‘சிவசேனை அதிகாரத்திற்காகப் பிறக்கவில்லை. அதிகாரம் தான் சிவசேனையிற்காகப் பிறந்தது. நாங்கள் மீண்டு வருவோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே “ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கோவாவில் இருக்கிறார்கள். நான் இன்று  மும்பை செல்ல உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT