இந்தியா

மணிப்பூரில் நிலச்சரிவு: இருவர் பலி, 12 பேர் மாயம் 

DIN

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் புதன்கிழமை இரவு துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் நடந்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், சுமார் 50 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும்,  மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

நோனி துணை ஆணையர் வெளியிட்டுள்ள தகவலில், 

துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் அணை உடைந்துள்ளதால் நோனி மாவட்ட தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

19 முதல் ஜூன் 1 வரை தோ்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை

கப்பல்களுக்கான பாதுகாப்பு நடைமுறை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

பாஜக, அதிமுகவை வீழ்த்துவோம் முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT