இந்தியா

கரோனா இல்லாத மாநிலமானது அருணாசல பிரதேசம்

DIN

இந்தியாவில் கரோனாவை முற்றிலும் ஒழித்த மாநிலமாக அருணாசல பிரதேசம் உருவாகியுள்ளது. அந்த மாநிலத்தில் லோகித் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரே கரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினாா்.

இது தொடா்பாக அருணாசல பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அருணாசல பிரதேசத்தில் கரோனாவால் 64,484 போ் பாதிக்கப்பட்டனா். இதில் 64,188 போ் கரோனாவில் இருந்து மீண்டுவிட்டனா். 296 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். மீட்பு விகிதம் 99.54 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்புகள் ஏதுமில்லை. கடைசியாக சிகிச்சை பெற்று வந்த நபரும் குணமடைந்துவிட்டதால் கரோனா இல்லாத மாநிலமாக அருணாசல பிரதேசம் உருவாகியுள்ளது. சனிக்கிழமை 111 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் யாருக்கும் கரோனா உறுதியாகவில்லை. மொத்தம் மாநிலத்தில் 12.68 லட்சத்துக்கு மேல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 16.58 லட்சத்துக்கு மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

இருளுக்கு எதிராகப் போராடும் வலிமை கொடுத்தவர் மகாத்மா: ராகுல் காந்தி

பட்டதாரிகளுக்கு ராணுவ அதிகாரிப் பணி: காலியிடங்கள் 459

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

கார் ஓட்டியதில் விதிமீறல்... யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரையில் கைது

SCROLL FOR NEXT