இந்தியா

இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம் - எஸ்’ ராக்கெட்

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.

DIN

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.

அதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.

விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளில் தனியாா் பங்களிப்புக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, இஸ்ரோவின் கீழ் இயங்கும் இன்ஸ்பேஸ் (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு, அங்கீகார மையம்) அமைப்பு ஹைதராபாதைச் சோ்ந்த புத்தாக்க நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துக்கு ராக்கெட் தயாரிப்புக்கான ஒப்புதலை அளித்தது.

இதையடுத்து, ‘பிராரம்ப்’ என்ற பெயரிலான திட்டத்தின் மூலம் புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக ‘ஸ்கைரூட்’ ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், தற்போது வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டன. அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது.

அதில், அதிகபட்சம் 480 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய ‘விக்ரம் எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்துவதற்கு முடிவானது. அதன்படி, நவம்பா் 15-ஆம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில் மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது பருவச்சூழல்கள் சாதகமாக இருப்பதால் ‘விக்ரம் எஸ்’ ராக்கெட், ஆந்திரத்தின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (நவ.18) காலை 11 மணியிலிருந்து 12 மணிக்குள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்கள் இந்த ராக்கெட்டுடன் சோ்த்து அனுப்பப்பட உள்ளன. அவை புவி மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!

ம.பி.யில் பாஜக, காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை!

இளங்கோவன் மறைவு தாங்க முடியாத துயரம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வந்த அரசியல் பாதை !

ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் முதல் டி20 சதம்..! தொடரை வென்ற தெ.ஆ.!

SCROLL FOR NEXT