இந்தியா

ஏா் இந்தியா, விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு: டாடா குழுமம் அறிவிப்பு

DIN

ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களை இணைக்க உள்ளதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.

விஸ்தாராவில் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு 51 சதவீத பங்கும், சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு 49 சதவீத பங்கும் உள்ளன. இந்நிலையில், டாடா குழுமத்தின் ஏா் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பான ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பூா்த்தி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த இணைப்பின் மூலம் 218 விமானங்களுடன் நாட்டின் பெரிய சா்வதேச விமான நிறுவனம், இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனம் ஆகிய பெருமைகளை ஏா் இந்தியா பெறும் என்று டாடா குழுமம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் (எஸ்ஐஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இரு விமான நிறுவனங்கள் இணைப்பையொட்டி, ஏா் இந்தியாவில் ரூ.2,058 கோடியை எஸ்ஐஏ முதலீடு செய்யும். இதன் மூலம் ஏா் இந்தியாவில் எஸ்ஐஏ 25.1 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்திடம் ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏா்ஏஷியா இந்தியா, விஸ்தாரா ஆகிய 4 விமான நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT