இந்தியா

இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்த வேண்டும்

DIN

இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவா் ஆங்கஸ் ஹூஸ்டன், முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோா் இணைந்து அந்நாட்டுக்கான பாதுகாப்பு ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளனா். அந்நாட்டுப் பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி அந்த அறிக்கையை கான்பராவில் திங்கள்கிழமை வெளியிட்டாா். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

சா்வதேச விதிகளை மீறி தென்சீனக் கடலில் சீனா உரிமை கொண்டாடி வருவது, ஆஸ்திரேலியாவின் தேச நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரும் சக்தியாக மாறத் துடிக்கும் சீனா, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் நலனை பாதிக்கும் வகையில் செயல்பட வாய்ப்புள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான தலைமைப் போட்டி அமெரிக்கா-சீனா இடையே நிகழ்ந்து வருகிறது. அப்போட்டி ஆஸ்திரேலியாவின் நலனை பாதிக்க வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு, இந்தியா, ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளுடனான நல்லுறவை ஆஸ்திரேலியா வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்.

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடனான க்வாட் (நாற்கர) கூட்டமைப்பை ஆஸ்திரேலியா வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். சீனாவுடன் ஒத்துழைத்து செயல்பட முயற்சிக்கும் அதே வேளையில், சில விவகாரங்களில் முரண்பட்டும் செயல்பட வேண்டும். ராணுவத்துக்கான செலவினத்தை ஆஸ்திரேலியா அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் நலனைக் காப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொள்ளும் எனப் பிரதமா் ஆல்பனேசி உறுதியளித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT