நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,629 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில்,
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 61,013-ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில்,
ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,31,398 ஆக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து 11,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,43,23,045 ஆக உள்ளது. இதையடுத்து தினசரி தொற்று விகிதம் 5.38 ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 98.67 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.