இந்தியா

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பா..? - மத்திய அமைச்சர் விளக்கம்

DIN

தில்லி : பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பை, இந்தியாவில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அரசு ஏதேனும் தீர்மானம் கொண்டுவர உள்ளதா?” மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சரின் கவனத்திற்கு செல்லாமல் அவருடைய பெயரைக் குறிப்பிட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  பதிவேற்றப்பட்டுள்ள பதில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. 

“பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பை, இந்தியாவில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க அரசு ஏதேனும் தீர்மானம் கொண்டுவர உள்ளதா?”  என மக்களவையில்  கண்ணூர் தொகுதி எம்.பி. சுதாகரன்  எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியின் பெயரைக் குறிப்பிட்டு, இந்த கேள்விக்கான பதிலுடன், மக்களவை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளத்தில் நேற்று(டிச.8) பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், குழப்பமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பு தொடர்பான சர்ச்சை குறித்து  இன்று(டிச.9)  பதிலளித்த   அமைச்சர் மீனாட்சி லேகி கூறியதாவது, “உங்களுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி மற்றும் அதற்கான பதில் அடங்கிய எந்தவொரு பத்திரத்திலும் நான் கையெழுத்திடவில்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

எனினும், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய அமைச்சரின் கவனத்திற்கு செல்லாமல் அவருடைய பெயரைக் குறிப்பிட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  பதிவேற்றப்பட்டுள்ள பதில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்,  எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த குளறுபடி தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, இந்த விவகாரத்தில், அமைச்சர் மீனாட்சி லேகிக்கு கண்டனம் தெரிவித்து, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி மற்றும் காங்கிரஸ் தலைவர் அமிதாப் துபே ஆகியோர் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சர் மீனாட்சி லேகியின் பெயரில் தொழில்நுட்ப சரிபார்ப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், வழக்கமான அலுவல் நடைமுறையில் பிரச்னை ஏற்பட்டதால் குழப்பம் ஏற்பட்டதாகவும் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT