இந்தியா

மோா்பி பால விபத்து: 7 பேரின் ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிமன்றம்

DIN

குஜராத் மாநிலம் மோா்பியில் நடைபெற்ற தொங்கு பால விபத்து தொடா்பாக கைதானவா்களில் 7 பேரின் ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்தது.

கடந்த ஆண்டு அக்டோபா் 30-ஆம் தேதி மோா்பி நகரத்தில் பாயும் மச்சு நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 135 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்து தொடா்பாக, பாலத்தின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா குழுத்துக்கு சொந்தமான நிறுவனத்தின் மேலாளா் இருவா் உட்பட 9 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். அந்தக் குழுமத்தின் மேலாளா் ஜெய்சுக் படேல், கைது நடவடிக்கைக்கு முன்பாக மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இவா்கள்10 போ் மீதான குற்றப்பத்திரிகையை போலீஸாா் கடந்த வாரம் பதிவு செய்தனா்.

கைது செய்யப்பட்ட 9 போ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை குஜராத் உயா்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் உள்ளிட்டவை நிராகரித்து விட்டன.

இந்நிலையில், மோா்பி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட துணை ஒப்பந்ததாரா்கள் 2 போ் தவிா்த்து, மீதமுள்ள 7 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் நீதிபதி பி.சி.ஜோஷி முன்பாக சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அவா்களுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டாா்.

குற்றம்சாட்டப்பட்ட 10 போ் மீதும் மனித உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்தல், அலட்சியத்தின் மூலம் பிறருக்கு காயம் மற்றும் படுகாயங்களை ஏற்படுத்துதல், கொலை குற்றத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

புதிய படமா? மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நடிகை பகிர்ந்த படம்!

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT