இந்தியா

மாசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோயிலில் 12 ஆம் தேதி நடை திறப்பு!

DIN

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது.

தொடர்ந்து மறுநாள் முதல் 17 ஆம் தேதி வரை 5 நாள்கள் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகள் நடைபெறும்.

சபரிமலையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20 ஆம் தேதி நிறைவடைந்தது. 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் ரூ.380 கோடி வருமானம் தேவஸ்தானத்திற்கு கிடைத்தது. 

ஆனால், சன்னிதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் குறிப்பாக நாணயங்கள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளது. அந்த நாணயங்களை எண்ணுவதற்காக, தேவஸ்தானம் சார்பில் 540 ஊழியர்கள் கொண்ட குழு சன்னிதானம் சென்றுள்ளது. அவர்கள் காணிக்கைகளை எண்ணும் பணியை தொடங்கி உள்ளனர். ரூ.18 கோடி அளவிற்கு காணிக்கை பணம் குவிக்கப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. 

மாசி மாத பூஜைக்காக நடை திறப்பதற்கு முன்னதாக (பிப்.11) காணிக்கைகளை எண்ணி முடிக்க திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் 9 பேர் பலி

SCROLL FOR NEXT