இந்தியா

ரயில் பெட்டிகளில் வைஃபை வசதி: கோவா முதல்வர் வலியுறுத்தல்!

DIN

கோவாவில் ரயில் பெட்டிகளில் வைஃபை வசதியை நிறுவக் கோரி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கடிதம் எழுதவுள்ளதாகத் தெரிவித்தார். 

மங்களூருவில் இருந்து கோவாவுக்குத் திரும்பிய பிறகு, ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ரயிலில் பயணம் செய்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

நேத்ராவரி எக்ஸ்பிரஸ் மூலம் கோவா திரும்பியபோது, ரயிலில் சில சிக்கல்களைக் கவனித்தேன். அதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ரயிலில் வைஃபை இணைப்பு இல்லாதது என்றார். 

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாக அவர் தெரிவித்தார். 

கோவா மற்றும் மங்களூரு இடையே இணைப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

மும்பை மற்றும் மங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை கோவா வரை நீட்டிக்க வேண்டும், மேலும் மங்களூரு மற்றும் கோவாவில் உள்ள மோபாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையே விமான இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சாவந்த் கூறினார்.

மங்களூரு மற்றும் கோவா இடையேயான இணைப்பு இரு மாநிலங்களுக்கு இடையே சுற்றுலா மற்றும் வர்த்தகத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT