இந்தியா

தில்லியில் ஜூன் மாதம் குளிா்ச்சியாக தொடக்கம்

DIN

 மேகமூட்டமான வானம் மற்றும் கடந்த சில நாள்களாகப் பெய்த மழையின் தாக்கம் ஆகியவற்றுடன் தில்லியில் ஜூன் மாதம் குளிா்ச்சியுடன் தொடங்கியது.

தலைநகரில் வியாழனன்று பொதுவாக பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் பலத்த காற்றும் மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்திருந்தது. இதன்படி, வியாழக்கிழமை காலையில் தில்லியில் சில இடங்களில் பலத்த காற்றுடன் பரவலாக தூறல் மழை பெய்தது.

தலைநகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 6 புள்ளிகள் குறை்து 20.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 7 டிகிரி குறைந்து32.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 82 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நரேலாவில் 6 மி.மீ. மழை: மேலும், வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று, ஜஃபா்பூரில் 1.5 மி.மீ., நஜஃப்கரில் 4.5 மி.மீ., தில்லி பல்கலை.யில் 3.5 மி.மீ., நரேலாவில் 6 மி.மீ., பாலத்தில் 0.8 மி.மீ., ரிட்ஜில் 3 மி.மீ., பீதம்புராவில் 3.5 மி.மீ., சா்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 0.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஐஎம்டியின் பிராந்திய முன்னறிவிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவஸ்தவா, மே 1987-இல் தில்லியில் சராசரியாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றாா். இந்த ஆண்டு மே மாதத்தில் சராசரியாக அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதற்குப் பிறகு மிகக் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று அவா் கூறினாா்.

தில்லியில் மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் பதிவானது. வெப்ப அலை நிலைமைகள் இரண்டு நாள்களுக்கு தேசிய தலைநகரின் சில பகுதிகளை பாதித்தது. இருப்பினும், சஃப்தா்ஜங் ஆய்வகம் இந்த ஆண்டு பருவமழைக்கு முந்தைய பருவத்தில் எந்த வெப்ப அலையையும் பதிவு செய்யவில்லை. இது 2014-க்குப் பிறகு முதல் முறையாக நடந்துள்ளது என்று ஸ்ரீவஸ்தவா கூறினாா்.

வானிலை நிலையம் கடந்த ஆண்டு பருவமழைக்கு முந்தைய பருவத்தில் 13 வெப்ப அலைகளை பதிவு செய்தது. அதாவது ஏப்ரலில் ஒன்பது மற்றும் மே மாதத்தில் நான்கு வெப்ப அலைகளை பதிவு செய்தது. இந்தக் காலகட்டத்தில் 2021-இல் ஒரு வெப்ப அலை நாள், 2020-இல் நான்கு மற்றும் 2019-இல் ஒரு நாள் வெப்பஅலை பதிவாகியுள்ளது.

ஒரு நிலையத்தின் அதிகபட்ச வெப்பநிலை சமவெளிகளில் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 37 டிகிரி மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் 30 டிகிரி செல்சியஸ் அடையும் போது வெப்ப அலை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

பொதுவாக தில்லியில் மே மாதம் வெப்பமான மாதமாகும். இந்த முறை 111 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நீண்ட கால சராசரியான 30.7 மிமீ விட 262 சதவீதம் அதிகமாகும். ஐஎம்டி தரவுகளின்படி, 2008-இல் 165 மிமீ, 2021-இல் 144.8 மிமீ மற்றும் 2002-இல் 129.3 மிமீ மழை பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. வழக்கமாக, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடக்கு சமவெளிகளில் ஐந்து முதல் ஆறு மேற்கத்திய தொந்தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த முறை, 10 மேற்கத்திய தொந்தரவுகள் பதிவாகியுள்ளன. இது பெரும்பாலும் வலுவானவை என்று ஸ்ரீவஸ்தவா கூறினாா்.

காற்றின் தரம்: தலைநகரில் பட்பா்கஞ்ச், மேஜா் தயான் சந்த் நேஷன்ல் ஸ்டேடியம், நொய்டா செக்டாா்-1, லோதி ரோடு, மந்திா் மாா்க், நேருநகா் உள்பஉள்பட பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிவில் இருந்தது. அதே சமயம், ஆனந்த் விஹாா் (142), சாந்தினி சௌக் (113), விவேக் விஹாா் (107), தில்ஷாத் காா்டன் (102), சோனியா விஹாா் (108), நோய்டா செக்டாா்-125 (122), பூசா (121), வாஜிா்பூா் 129) ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மிதமான‘ பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளியன்று (ஜூன் 2) தலைநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT