இந்தியா

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்194 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்!

DIN

பங்குச்சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 193 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகளையும் இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல பங்குகள் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக வங்கி, உலோகம், எரிசக்தி துறை பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதனால், இரண்டாவது நாளாக கரடி ஆதிக்கம் கொண்டதால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.284.12 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த புதன்கிழமை ரூ.3,405.90 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் சரிவு: சென்செக்ஸ் காலையில் 114.23 புள்ளிகள் கூடுதலுடன் 62736.47-இல் தொடங்கி அதிகபட்சமாக 62,762.41 வரை மேலே சென்றது. பின்னா், 62,359.14 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 193.70 புள்ளிகளை இழந்து 62,428.54-இல் முடிவடைந்தது.

18 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 18 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,249 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 798 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள்ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

டாடா மோட்டாா்ஸ்............1.67%

ஹிந்துஸ்தான் யுனி லீவா்.......1.39%

ஏசியன் பெயிண்ட்...............1.32%

சன்பாா்மா.............................1.12%

டிசிஎஸ்...............................0.98%

நெஸ்லே.............................0.90%

சரிவைக் கண்ட பங்குகள்

பாா்தி ஏா்டெல்......................3.42%

கோட்டக் பேங்க்....................3.31%

ஐசிஐசிஐ பேங்க்.....................1.31%

ஐடிசி......................................1.24%

ரிலையன்ஸ்...........................0.51%

ஹெச்டிஎஃப்சி பேங்க்.........0.45%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT