இந்தியா

ஒடிசா ரயில் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்களுக்கு நவீன் பட்நாயக் நன்றி

DIN

பாலாசோர்: ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே  நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் நன்றி தெரிவித்தார். 

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. 

பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், ரயில் விபத்து நாடு முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கிழக்கு ரயில்வே சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

இந்நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்தை, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் நேரில் பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

பாலாசோர் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளையும் சந்தித்து ஆறுதல் கூறினார் பட்நாயக்.

ஆய்வுக்கு பின்னர் முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, "இந்த விபத்து மிகவும் சோகமான கோர ரயில் விபத்து. கோர விபத்தின் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்கு ஒரே இரவில் உழைத்த உள்ளூர் மக்களுக்கும், உள்ளூர் தன்னார்வ குழுக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே பாதுகாப்புக்கு எப்போதும் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்," என்று பட்நாயக் கூறினார்.

பட்நாயக்கின் அறிவுறுத்தலின்படி, காயமடைந்த பயணிகள் கட்டாக் மற்றும் பிற மருத்துவமனைக்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT