இந்தியா

ஜாா்க்கண்ட் சட்ட விரோத சுரங்கத்தில் விபத்து: 3 போ் பலி

DIN

ஜாா்க்கண்ட், பெளரா கொலிரி பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரிச் சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். பலா் சுரங்கத்தில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

உள்ளூா்வாசிகள் பலா் பிசிசிஎல் பெளரா நிலக்கரிச் சுரங்கத்தில் சட்டவிரோத சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சுரங்கத்தில் விபத்து ஏற்பட்டதாகவும், சுரங்கத்தில் இருந்து 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

மேலும் பலா் சுரங்கத்தில் சிக்கி உள்ளதாகவும் உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மீட்புப் பணி முடிந்த பின்புதான் தெரியவரும் என்றும் காவல் துறை இணை கண்காணிப்பாளா் அபிஷேக் குமாா் கூறினாா்.

தன்பாத், கோபிநாத்பூரில் கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தில் நடைபெற்ற சட்டவிரோத சுரங்கப் பணியின்போது கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட விபத்தில் 5 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா மாநில தினத்தை முன்னிட்டு திரௌபதி முர்மு வாழ்த்து

நார்வே செஸ்: கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா!

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்: எஸ்பிஐ பொருளாதார ஆய்வறிக்கை

டிரம்ப் அதிபரானால் மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி?

SCROLL FOR NEXT