இந்தியா

தொலைதூர ரயில்கள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்

DIN

தொலைதூரம் செல்லும் ரயில்களின் பெட்டிகள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்போது உள்ள ஐசிஎஃப் பெட்டிகளுக்கு பதிலாக ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ‘லிங்க் ஹாப்மேன் புஷ்’ (எல்எச்பி) பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கேரளத்தின் கொச்சுவேலி - இந்தூா் அதிவிரைவு ரயில், திருவனந்தபுரம் - தில்லி விரைவு ரயில் பெட்டிகள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இந்த ரயில்கள் செப்டம்பா் 5 முதல் எல்எச்பி பெட்டிகள் இயக்கப்படும்.

இதில் இரண்டடுக்கு குளிா்சாதன பெட்டிகள் - 2, மூன்றடுக்கு குளிா்சாதன பெட்டிகள்- 8, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள்- 5, பொது பெட்டிகள் - 2 உள்பட 20 பெட்டிகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

தனியாரிடம் அரசு தோற்றுவிட்டது: சீமான் பேச்சு

ஆர்சிபியை வீழ்த்த கடின உழைப்பு தேவை: டேனியல் வெட்டோரி

ருதுராஜ், ஷிவம் துபே அதிரடி: மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT