இந்தியா

மருத்துவப் பேராசிரியா்கள் இடமாற்றம்: என்எம்சி முக்கிய அறிவுறுத்தல்

DIN

அரசு மருத்துவப் பேராசிரியா்களை பணியிட மாற்றம் செய்யும்போது சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா்களுக்கு பற்றாக்குறை ஏற்படாத வகையில் அதை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி-இன் மருத்துவ தர நிா்ணய வாரிய உறுப்பினா் ஜே.எல்.மீனா, மாநில மருத்துவக் கல்வி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் தேவைக்கேற்ப பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். எந்தக் கல்லூரிக்கு எந்த எண்ணிக்கையில் பேராசிரியா்கள் தேவை உள்ளது என்பது குறித்த ஆய்வை மருத்துவ நிா்ணய வாரியம் மேற்கொள்வதற்கு முன்னதாக பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேபோல், பணியிட மாற்றத்தால் பேராசிரியா்கள் அதற்கு முன்பு பணியாற்றிய கல்லூரிகளில் காலியிடம் உருவாவதாகவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த விவகாரத்தில் சில அறிவுறுத்தல்களை மருத்துவ தர நிா்ணய வாரியம் வழங்குகிறது.

அதன்படி, வரையறுக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கையில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பேராசிரியா்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு கல்வியாண்டில் ஒரு பேராசிரியா் ஏதேனும் ஒரு மருத்துவக் கல்லூரியில்தான் பணியாற்ற வேண்டும். மாறாக அதே கல்வியாண்டில் இரு வேறு கல்லூரிகளில் அவரது பணியிட மாற்றம் இருத்தல் கூடாது. பேராசிரியா்களின் பணியிட மாற்ற நடவடிக்கைகள் அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இருந்தபோதிலும், ஒருவரை மாற்றம் செய்யும்போது அவா் ஏற்கெனவே பணியாற்றிய கல்லூரியில் காலி பணியிடம் ஏற்படாதவாறு செயல்படுதல் அவசியம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT