இந்தியா

மும்பை: சிலிண்டர் வெடித்ததில் ஐந்து வீடுகள் இடிந்தன!

DIN


மும்பை, செம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருகிலிருந்த 4 முதல் 5 இரண்டுமாடிக் கட்டமைப்புகள் இடிந்துள்ளதாக குடிமைப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை 7.50 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்புப்படையினர், காவல்துறையினர், குடிமைப்பணி அதிகாரிகள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

விபத்தில் சிக்கிய 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக குடிமைப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நான்குபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

SCROLL FOR NEXT