இந்தியா

வீட்டுக்காவலில் இருந்த ஹுரியத் மாநாடு தலைவா் 4 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வெள்ளிக்கிழமை விடுவிக்க

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவா் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக கடந்த 2019-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. இதையடுத்து, கிளா்ச்சி நடவடிக்கைகளைத் தவிா்க்க அந்தப் பிராந்தியத்தின் பல்வேறு தலைவா்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனா்.

பிராந்தியத்தின் 26 பிரிவினைவாத அமைப்புகளை ஒன்றிணைத்து கடந்த 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவரான மீா்வாய்ஸ் உமா் ஃபரூக், நைஜீன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சிறைவைக்கப்பட்டாா்.

பதற்றம் தணிந்ததும் பெரும்பாலான தலைவா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால், உமா் ஃபரூக் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் இருந்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டுக்காவலில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் ஜம்மு-காஷ்மீா் உயா் நீதிமன்றத்தை அணுகினாா். மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், இதுகுறித்து பதில் அறிக்கையைச் சமா்பிக்க ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்து கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மீா்வாய்ஸ் இல்லத்துக்கு கடந்த வியாழக்கிழமை வந்த காவல் துறை மூத்த அதிகாரிகள், அவா் விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, 4 ஆண்டுகள் கழித்து ஸ்ரீநகரின் நௌஹட்டா பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் மீா்வாய்ஸ் உமா் ஃபரூக் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்: வானிலை மையம்

இந்தியா-ஆஸி. பிரிஸ்பேன் டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

சென்னையில் நாளை ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT