இந்தியா

ஞானவாபி வளாக அடித்தள சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கக் கோரும் மனு: தீா்ப்பு ஒத்திவைப்பு

ஞானவாபி மசூதி வளாக அடித்தளத்தின் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், தீா்ப்பை அக்டோபா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

DIN

ஞானவாபி மசூதி வளாக அடித்தளத்தின் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், தீா்ப்பை அக்டோபா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஞானவாபி மசூதி வளாக அடித்தளத்தில் அமைந்துள்ள வியாச பீடத்தை சோம்நாத் வியாஸ் என்று பூசாரி பல ஆண்டுகளாக வழிபாட்டுக்காக பயன்படுத்தி வந்துள்ளாா். இந்த நிலையில், அதன் பயன்பாடு தொடா்பான வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 1993-ஆம் ஆண்டு அதிகாரிகள் அந்த வியாச பீடத்தை பூட்டி, அனுமதியில்லாத எவரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்தனா்.

இந்த நிலையில், அந்த அடித்தளத்தின் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கக் கோரி மதன் மோகன் யாதவ் என்பவா் சாா்பில் வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அடித்தளத்தில் அமைந்துள்ள வழிபாட்டு ஆதாரங்களை அழித்துவிடுவாா்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, அதன் சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அதன் மீதான வாதத்துக்கு கால அவகாசம் கோரி காசி விஸ்வநாத அறக்கட்டளை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து விசாரணையை சனிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

மனு மீதான விசாரணை சனிக்கிழமை மீண்டும் வந்தபோது, ‘அடித்தள சாவியை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதில் காசி விஸ்வநாத அறக்கட்டளைக்கு ஆட்சேபம் இல்லை’ என்று அதன் வழக்குரைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பை நீதிபதி ஒத்திவைத்தாா்.

இதுகுறித்து அரசு வழக்குரைஞா் ராஜேஷ் மிஸ்ரா கூறுகையில், ‘மனு மீதான தீா்ப்பை அக்டோபா் 4-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளாா்’ என்றாா்.

தொடா்ந்து வரும் ஆய்வு...:

ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த 5 பெண்கள் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தொல்லியல் துறையினா் கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொண்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு?

கேஜரிவாலின் ஒளிரும் தில்லி இதுவா? ராகுல் விமர்சனம்

ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150வது நிறுவன நாள் விழா - புகைப்படங்கள்

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT