முகப்பு
இந்தியா

தில்லியில் வெப்பநிலை திடீா் அதிகரிப்பு!

Updated On : 7 ஏப்ரல், 2024 at 4:02 PM
பகிர்:

புதுதில்லி: தலைநகரில் இன்று அதிகபட்ச வெப்பநிலையான 35.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது சராசரியை வெப்பநிலை விட அதிகபட்ச வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு பகலில் 63 சதவிகிதம் முதல் 21 சதவிகிதம் வரை உணர முடிந்தது.

நாளை (திங்கள்கிழமை) வானம் தெளிவாக இருக்கும் என்றும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 36 மற்றும் 17 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியின் நஜாஃப்கரில் பகுதியில் மாலை 6.30 மணியளவில் 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →