திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி பணியிடை நீக்கம்
நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி கே.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும், அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.ராஜசேகரன்
நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு செய்த திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி கே.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும், அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடுகள், மோசடியில் ஈடுபட்டதாக அம்மாவட்ட முதன்மை நீதிபதி கே.கணேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அவருக்குப் பதில் நீதிபதி ஆர்.ராஜசேகரனை நியமித்து உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement